/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடில்கள் அமைத்து இருளர் மக்கள் போராட்டம் இன்று அமைதி பேச்சுக்கு முடிவு
/
குடில்கள் அமைத்து இருளர் மக்கள் போராட்டம் இன்று அமைதி பேச்சுக்கு முடிவு
குடில்கள் அமைத்து இருளர் மக்கள் போராட்டம் இன்று அமைதி பேச்சுக்கு முடிவு
குடில்கள் அமைத்து இருளர் மக்கள் போராட்டம் இன்று அமைதி பேச்சுக்கு முடிவு
ADDED : நவ 28, 2024 06:30 AM
ஓமலுார்: காடையாம்பட்டி, கே.மோரூரில் இருளர் பழங்குடி மக்கள், தலை-முறை, தலைமுறையாக விவசாயம் செய்து வசிக்கின்றனர். அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த இடம் அரசு நிலம் என, வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்-றனர்.இந்நிலையில் அச்சங்கம் சார்பில் வட்ட தலைவர் ஈஸ்வரன், இருளர் மக்கள், நேற்று ஒன்று கூடினர். தொடர்ந்து
சம்பந்தப்-பட்ட நிலத்தில், 30க்கும் மேற்பட்ட குடில்களை அமைத்தனர். இதை அறிந்து, காடையாம்பட்டி
வருவாய்த்துறையினர், தீவட்-டிப்பட்டி போலீசார் அங்கு வந்தனர். தொடர்ந்து முதல்கட்டமாக,
சம்பந்தப்பட்ட, 1.40 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டது.பின், 'குடில்களை அகற்ற வேண்டும்' என, வருவாய்த்துறையினர் தெரிவிக்க, மலைவாழ் இன மக்கள்
மறுத்தனர். இதனால், ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் அறிவுறுத்தலின்படி, இன்று அமைதி பேச்சு நடத்தி
முடிவு செய்யலாம் என முடிவு செய்யப்-பட்டது. இதனால் மக்கள், குடில்களை அகற்றாமல், அப்படியே விட்டு
கலைந்து சென்றனர்.இதுகுறித்து காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன் கூறு-கையில், ''இருளர் மக்களுக்கு பட்டா வழங்க சிலர்
தேர்வு செய்-யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.