/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி கொங்கு பாலிடெக்னிக் மண்டல கபடியில் முதலிடம்
/
தி கொங்கு பாலிடெக்னிக் மண்டல கபடியில் முதலிடம்
ADDED : பிப் 05, 2024 10:28 AM
சேலம்: பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையே, 2023 - -24ம் ஆண்டு, மண்டல கபடி போட்டி, சி.எம்.எஸ்., பாலிடெக்னிக்கில் நடந்தது. அதில் மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் அணி முதலாமிடம் பிடித்தது. அந்த அணிக்கு கோப்பை, பரிசுத்தொகையை, தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் ராமலிங்கம், செயலர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன் வழங்கினர்.
அந்த அணியில் தி கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களான, 3ம் ஆண்டு மெக்கானிக்கல் தயாநிதி, பிரசன்னா, மணிகண்டன், எலக்ட்ரிக்கல் அஜய், எலக்ட்ரானிக்ஸ் தினகரன், 2ம் ஆண்டு ஆட்டோமொபைல் சந்தோஷ், தீனா, எலக்ட்ரிக்கல் கவின்ராஜ், முதலாம் ஆண்டு சிவில் பிரியன், மெக்கானிக்கல் சஞ்சய், மனோ, ஆட்டோமொபைல் தேவா ஆகிய மாணவர்கள் இருந்தனர்.
அவர்கள், மாநில கபடி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களின் சாதனையை, தி கொங்கு பாலிடெக்னிக் முதல்வர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷ், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

