/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பரணி தீபம்
/
கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பரணி தீபம்
ADDED : டிச 13, 2024 01:45 AM
கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பரணி தீபம்
தாரமங்கலம், டிச. 13-
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நேற்று நடந்தது. சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் சிவகாமசுந்தரி, முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு, மூலஸ்தானம் முன், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பூசாரி பரணி தீபத்தை கையில் ஏந்தி, சுவாமிக்கு காட்டி, சிவகாமசுந்தரி, நடராஜர், ஆறுமுகபெருமான், சோமாஸ்கந்தருக்கு காட்டி, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து நிறைவு செய்தனர். இதில் ஏராளமான
பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க தரிசித்தனர். ஆண்டுதோறும்முக்கிய வீதிகள் வழியே வலம் வரும் பரணி தீபம், மழையால் நடப்பாண்டு கோவில் உட்பிரகாரத்தில் மட்டும் சுற்றி
வந்தது.