/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீரோ பட்டறை ஓனர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 'சரண்டர்'
/
பீரோ பட்டறை ஓனர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 'சரண்டர்'
பீரோ பட்டறை ஓனர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 'சரண்டர்'
பீரோ பட்டறை ஓனர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 'சரண்டர்'
ADDED : நவ 11, 2024 07:45 AM
காரிப்பட்டி: சேலம் அருகே பீரோ பட்டறை உரிமையாளர் கொலையில், முக்கிய குற்றவாளிகள் உள்பட, 10 பேர், போலீசில் சரணடைந்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 40; வெள்ளாளகுண்டத்தில் பீரோ பட்டறை வைத்திருந்தார். கடந்த, 8ல் குள்ளம்பட்டி, பனங்காடு அருகே காரில் சென்றபோது கும்பலால் வழிமறித்து கொலை செய்யப்பட்டார். காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமையில், 6 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஒன்றரை ஆண்டு களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் ஆதரவாளர்கள், சரவணனை கொன்றது தெரிந்தது. திருச்செங்கோடு அருகே பதுங்கியிருந்த கொலையாளிகளான ஆனந்தனின் மைத்துனரான வக்கீல் கணேசன், ஆனந்தனின் மனைவி சத்யா, ஜீவன்ராஜ், சாரதி, சூர்யா, பன்னீர்செல்வம், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆனந்தனின் மற்றொரு மைத்துனர் கார்த்தி, 33, வெள்ளியம்பட்டியை சேர்ந்த ஆனந்தனின் உறவினர் கந்தசாமி, 32, சேலம், அழகாபுரம் பூபாலன், 27, மேட்டுப்பட்டி தாதனுார் மதியழகன், 33, மற்றும் பல்வேறு வகைகளில் கொலைக்கு உதவிய, குள்ளம்பட்டி அருண்குமார், 25, அருண், 26, கொண்டபநாயக்கன்பட்டி கீர்த்திவாசன், 31, மேட்டுப்பட்டி தாதனுார் லோகநாதன், 29, வெள்ளியம்பட்டி தங்கதுரை, 52, வலசையூர் மோகன், 38, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு போலீசில் சரணடைந்தனர்.ஆனந்தனை கொல்ல பணம் உள்ளிட்ட வகைகளில், சரவணன் உதவியதாக அறிந்து, கார்த்தி தலைமையிலான கும்பல், கொலையில் ஈடுபட்டுள்ளது.சரணடைந்த பலர் மீதும் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. இவ்வாறு போலீசார் கூறினர்.