/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சுகாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் மருத்துவ துறை'
/
'சுகாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் மருத்துவ துறை'
ADDED : டிச 15, 2024 01:02 AM
சேலம், டிச. 15-
இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழ்நாடு மாநில, 79வது மருத்துவ மாநாடு, சேலத்தில் நேற்று தொடங்கியது.
எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் ரவிபச்சமுத்து, இரு நாள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், ''சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மருத்துவ துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அறிவுப்பகிர்வு, நெட்வொர்க்கிங்கிற்கான இத்தகைய முக்கிய தளத்தை உருவாக்கிய, சங்க மாநில கிளையின் முயற்சி பாராட்டத்தக்கது,'' என்றார்.
தொடர்ந்து, 2024ல் சிறப்பாக பணியாற்றிய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, மருத்துவ மாநாடு புத்தகம் வெளியிடப்பட்டது.
இதில் சங்கத்தலைவர் அபுல்ஹசன், செயலர்கள் கார்த்திக் பிரபு, கவுரிசங்கர், மாநாட்டு குழு தலைவர் பாலு, செயலர் ரபீந்திரநாத், பொருளாளர் அருண்குமார், சங்க முன்னாள் துணைத்தலைவர் பிரகாசம், மாநில தலைவர் தேர்வு செங்குட்டுவன், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தேவிமீனாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று, 2ம் நாள் மாநாட்டில் மருத்துவ உலகில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.