/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம் குமுறலை கொட்டி தீர்த்த எம்.பி.,க்கள்
/
ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம் குமுறலை கொட்டி தீர்த்த எம்.பி.,க்கள்
ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம் குமுறலை கொட்டி தீர்த்த எம்.பி.,க்கள்
ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம் குமுறலை கொட்டி தீர்த்த எம்.பி.,க்கள்
ADDED : பிப் 29, 2024 08:49 PM
சேலம்:சேலம் ரயில்வே கோட்ட திட்டப்பணி ஆலோசனை கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தலைமை வகித்தார்.
அதில் எம்.பி.,க்கள் பேசியதாவது:
அ.தி.மு.க., சந்திரசேகரன்: எம்.பி.,க்களுக்கு சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உரிய மதிப்பு அளிப்பதில்லை. 2022ல் அமைச்சரிடம் வழங்கிய கோரிக்கை மனுவுக்கு இதுவரை நடவடிக்கை இல்லை.
ஈரோட்டில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
தி.மு.க., - தர்மபுரி செந்தில்குமார்: மொரப்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் ரயில்கள் நின்று செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
கொ.ம.தே.க., - நாமக்கல் சின்ராஜ்: ரயில்வே கட்டுமானப்பணிக்கு மாநில அரசை விட மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கி கொடுத்தாலும், சேலம் மாவட்டத்தில் வைகுந்தம், கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்படும் தரைப்பாலங்களின் தரம் மிக குறைவாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். நாமக்கல்லில் ரயில்கள் நின்று செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
காங்., கிருஷ்ணகிரி செல்லகுமார்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில்வே பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. ரயில்வே உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்யாமல் மக்கள் பணிகளை செய்ய வேண்டும்.
மா.கம்யூ., கோவை நடராஜன்: வட மாநிலங்களில் இருந்து கோவை வழியே வரும், ஆறு ரயில்கள், கோவையை புறக்கணித்து பீளமேடு, போத்தனுாருக்கு இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
பொள்ளாச்சி, திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும்.
கோவையில் இருந்து பெங்களூருக்கும் இரவு நேர ரயில் தேவை. சிங்காநல்லுார், பீளமேடு ஸ்டேஷன்களில் கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும். கோவை - மேட்டுப்பாளையம் தடத்தை, இரட்டை வழியாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

