/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு; இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?
/
மாட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு; இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?
மாட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு; இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?
மாட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு; இடைப்பாடி அருகே சிறுத்தை நடமாட்டமா?
ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
இடைப்பாடி: கோம்பைக்காட்டில் மாட்டை கொன்று தின்ற மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என கருதி, 13 கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா ஆனைப்பள்ளத்தை சேர்ந்த விவசாயி வீரப்பன், 51. இவரது ஆட்டை, கடந்த மாதம், 6 இரவு, மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது துாரம் இழுத்துச்-சென்றது. ஆட்டை இழுத்துச்சென்ற விலங்கின் காலடி தடம், சிறுத்தையுடன் ஒத்துப்போவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்-தனர். அப்போது மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்-கப்பட்டது.இதையடுத்து மேட்டூர் வனத்துறையினர், பூலாம்பட்டி போலீசார் ஆகியோர், பக்கநாடு, ஆடையூர், ஆனைப்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆனைப்பள்ளம் வனப்-பகுதியில், 13 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால் விலங்கின் நடமாட்டம் எதுவும் இல்லாததால், 15 நாட்களுக்கு பின், அனைத்து கேமராக்களையும் வனத்துறையி-னரே கழற்றி எடுத்துச்சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அருகே உள்ள கோம்-பைக்காட்டில் விவசாயி மாதையனுக்கு சொந்தமான மாட்டை மர்ம விலங்கு கொன்று, அதன் ஒரு பகுதியை தின்றுவிட்டு சென்-றுள்ளது. நேற்று காலை, மாதையனின் மனைவி ஆராயி, மாட்டை காணவில்லை என தேடியபோது வனப்பகுதி ஓரத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மாட்டின் பின்-புற காலில் ஒரு பகுதியை தின்ற மர்ம விலங்கு, மீதியை அப்ப-டியே விட்டு சென்றுள்ளது. மாட்டின் கழுத்து, தொடை, உடலின் பல இடங்களில் நக கீறல்கள் உள்ளன. இதுகுறித்து மேட்டூர் வனச்சரகர் ஜீவானந்தம், வனவர் ஜெயக்-குமார், வன காப்பாளர்கள் மதிவாணன், சந்திரன், பக்கநாடு கால்-நடை மருத்துவர் ராஜேஷ், வி.ஏ.ஓ., செல்லதுரை ஆகியோர், ஆடையூர், ஆனைப்பள்ளம், கோம்பைக்காடு உள்ளிட்ட வனப்ப-குதிகளில் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக கோம்பைக்காடு வனப்பகுதியில் மாடு இறந்து கிடந்த இடத்தை சுற்றி, இரண்டு, 'சிசிடிவி' கேமராக்கள், மர்ம விலங்கு வந்து சென்ற காலடி தடம், சுற்றுப்பகுதிகளில், 11 'சிசிடிவி' கேம-ராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். அந்த விலங்கின் காலடி தடம், சிறுத்தையின் கால் தடமாக இருக்-கலாம் என சந்தேகித்து வனத்துறையினர் தேடிவருகின்றனர்.