/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீமான் கட்சியில் அடுத்த 'விக்கெட்' சேலம் மேற்கு மா.செ., விலகல்
/
சீமான் கட்சியில் அடுத்த 'விக்கெட்' சேலம் மேற்கு மா.செ., விலகல்
சீமான் கட்சியில் அடுத்த 'விக்கெட்' சேலம் மேற்கு மா.செ., விலகல்
சீமான் கட்சியில் அடுத்த 'விக்கெட்' சேலம் மேற்கு மா.செ., விலகல்
ADDED : நவ 25, 2024 01:26 AM
சேலம்: நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலராக இருந்-தவர் ஜெகதீஷ், 38; முனைவர் பட்டம் பெற்ற இவர், அடிப்-படை உறுப்பினர், கட்சி பதவியில் இருந்து விலகுவதாக, சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
இதுவரை என்னோடு களமாடிய உண்மை நிர்வாகிகளுக்கு நன்றி. நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகு-வது கடினமானதாக இருந்தாலும், கட்சியின் சமீபகால செயல்-பாடு, குறிப்பாக உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்-தத்தை ஏற்படுத்தியது. அதனால் விலகல் முடிவுக்கு வந்தேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், ''என்னைப்போன்று, 120க்கும் மேற்பட்ட மாவட்ட செயலர்கள் உள்ளனர்.
அவர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளை சீமான் அழைத்து ஆலோசனை நடத்தி, அதன்பின் அவராகவே முடிவு எடுத்திருக்-கலாம். ஆனால் முக்கிய நிர்வாகிகளின் கருத்தை கேட்காமல், தேர்தலில் தனித்துப்போட்டி என்ற தன்னிச்சை முடிவு, எங்கள் உழைப்பு, நேரத்தை வீணடித்து விட்டதை உணர்கிறோம். இது நாங்கள் ஏமாற்றப்பட்டதன் வெளிப்பாடு. கடந்த எம்.பி., தேர்-லுக்கு பின், பலமுறை சிந்தித்து எடுத்த தீர்க்க முடிவு,'' என்றார்.
ஏற்கனவே சேலம் மாநகர், மாவட்ட செயலர் தங்கம், கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநகர் மாவட்ட செயலர் வைரம், மேட்டூர் நகர துணைத்
தலைவர் ஜீவானந்தம் ராஜா விலகியது குறிப்பிடத்தக்கது.