/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் ரூ.96 லட்சத்தில் செயல்படுத்தப்படும்'
/
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் ரூ.96 லட்சத்தில் செயல்படுத்தப்படும்'
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் ரூ.96 லட்சத்தில் செயல்படுத்தப்படும்'
ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டம் ரூ.96 லட்சத்தில் செயல்படுத்தப்படும்'
ADDED : ஜூலை 05, 2025 01:10 AM
சேலம், சென்னையில், முதல்வர் ஸ்டாலின், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து சேலம், கன்னங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி ஆகியோர், விவசாயிகளுக்கு வேளாண் ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினர்.
தொடர்ந்து வேளாண் துறையில், 18 விவசாயிகள், தோட்டக்கலைத்துறையில், 5 விவசாயிகளுக்கு, நெல் நுண்ணுாட்டம், உயிர் உர தொகுப்பு, சோளம், உளுந்து மினி கிட், பழச்செடிகள், காய்கறி விதை தொகுப்புகளை, கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:
தக்காளி, கத்தரி, வெண்டை உள்பட, 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய, 76,300 தொகுப்புகள், 45.75 லட்சம் ரூபாய் மதிப்பில், சேலம் மாவட்டத்தில் உள்ள
விவசாய குடும்பங்களுக்கு, 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. நகர், கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த, பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள், 47,000 விவசாய குடும்பங்களுக்கு, 47 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பயறு வகை விதை தொகுப்பு, 3.35 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 சதவீத மானியம் என, மாவட்டத்தில், 1.18 லட்சம் விவசாயிகளுக்கு, 96.13 லட்சம் ரூபாய் மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.