/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி மண் திருட்டு தடுக்க ஊர் மக்கள் புகார்
/
அனுமதியின்றி மண் திருட்டு தடுக்க ஊர் மக்கள் புகார்
அனுமதியின்றி மண் திருட்டு தடுக்க ஊர் மக்கள் புகார்
அனுமதியின்றி மண் திருட்டு தடுக்க ஊர் மக்கள் புகார்
ADDED : அக் 01, 2024 01:40 AM
அனுமதியின்றி மண் திருட்டு
தடுக்க ஊர் மக்கள் புகார்
சேலம், அக். 1-
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கோனேரிப்பட்டியை சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
எங்கள் கிராமத்தில் பெருமாள்மலை ஏரி உள்ளது. இதையொட்டியுள்ள ஒரு ஏக்கர் பரப்பில், அனுமதியின்றி மண் வெட்டி, இரவு பகலாக கடத்தப்பட்டு வருகிறது. தற்போது, 30 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டுவிட்டதால், ஏரிக்கரை வலுவிழந்து, அடியோடு சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஏரிக்கு நீர் ஆதாரமான பெருமாள்மலைக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏரி பாசனத்தை நம்பியிருக்கும், 100 ஏக்கர் விளைநிலம் வறண்டு விடும். அதனால், ஊர்மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். எனவே, சட்ட விரோதமாக மண் அள்ளும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, ஏரியையும், அதற்கு ஆதாரமான பெருமாள்மலையையும் பாதுகாக்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.