/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி எருதாட்டம் விரட்டியடித்த போலீசார்
/
அனுமதியின்றி எருதாட்டம் விரட்டியடித்த போலீசார்
ADDED : ஜன 18, 2024 02:27 AM

வாழப்பாடி:பொங்கல் பண்டிகையை ஒட்டி சேலம் மாவட்டம் காரிப்பட்டி, பெரியகவுண்டாபுரத்தில் மந்தைமேடு அருகே மாரியம்மன் கோவில் திடலில் எருதாட்டம் நடத்துவது வழக்கம். கடந்த, 2 ஆண்டுகளாக அனுமதி இன்றி எருதாட்டம் நடத்தினர். அதே போல இந்த ஆண்டும் நேற்று காலை, 10:00 மணிக்கு எருதாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட காளைகளுடன், 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அப்பகுதியினர் குவிந்தனர். காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்கூட்டியே வந்து அனுமதியின்றி எருதாட்டம்நடத்த முயன்றவர்களை தடியடி நடத்தி தடுத்து நிறுத்தினர். காளை முட்டியதில், இன்ஸ்பெக்டர் நவாஸ் காயம் அடைந்தார்.