ADDED : பிப் 20, 2025 07:20 AM
சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். அதன்படி சேலத்தில் கடந்த, 1ல் தங்கம் கிராம், 7,660 ரூபாய், பவுன், 61,280 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் கிராம், 7,940, பவுன், 63,520 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 95, பவுனுக்கு, 760 ரூபாய் உயர்ந்தது. அதன்-படி கிராம், 8,035, பவுன், 64,280 ரூபாய்க்கு விற்பனையானது. இது சேலத்தில் புது உச்சபட்ச விலையாக உள்ளது. கடந்த, 1 விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் கிராம், 375, பவுன், 3,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, சேலம் மாநகர தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்தகுமார் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்பின் புது அறிவிப்புகள், தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விலை உயர்வால் சேலத்தில், 20 சதவீதம் வரை தங்கம் விற்பனை குறைந்துள்ளது. திருமண நிகழ்ச்சி, சுபகூர்த்த நாட்கள் உள்ளதால், பெரிய அளவில் விற்பனை குறையவில்லை. தவிர பழைய தங்கத்தை, மக்கள் புது தங்கமாக மாற்றத்தொடங்கியுள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு நகை தேவை என, தங்கத்தை காசுக-ளாக வாங்குவதும் சற்று அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், எதிர்காலத்தில் தங்கம் விலை மேலும் உயரலாம் என்ற அச்சம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

