/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'திருப்பதி லட்டின் பெருமை குறையாது'
/
'திருப்பதி லட்டின் பெருமை குறையாது'
ADDED : செப் 22, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: இந்து மக்கள் கட்சி, பாண்டுரங்கநாதர் கமிட்டி சார்பில் திருப்பதி திருமலை பிரமோற்சவ நிகழ்ச்சிக்கு குடை அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ராமஜென்ம பூமி பிராண பிரதிஷ்டை விழாவில் வினியோகம் செய்த லட்டுவிலும் கலப்படம் செய்துள்ளதாக தகவல் வருகிறது. இது பக்தர்களின் மனதை புண்படுத்தும்படி உள்ளது. திருப்பதி, பழநி பிரசாதத்தில் கலப்படம் என வந்த செய்தி, மக்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் லட்டின் மகிமை, பெருமை சிறிதும் குறையாது.இவ்வாறு அவர் கூறினார்.