/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வாஜ்பாய் வழியில் நல்லாட்சி தந்துகொண்டிருக்கிறார் பிரதமர்
/
'வாஜ்பாய் வழியில் நல்லாட்சி தந்துகொண்டிருக்கிறார் பிரதமர்
'வாஜ்பாய் வழியில் நல்லாட்சி தந்துகொண்டிருக்கிறார் பிரதமர்
'வாஜ்பாய் வழியில் நல்லாட்சி தந்துகொண்டிருக்கிறார் பிரதமர்
ADDED : டிச 26, 2024 02:39 AM
'பனமரத்துப்பட்டி: மறைந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 100வது பிறந்த நாள் விழாவை, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில், பா.ஜ.,வினர் நேற்று கொண்டாடினர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்-முகநாதன் தலைமை வகித்தார். கட்சி கொடியேற்றி, வாஜ்பாய் படத்துக்கு மலர் துாவி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தொடர்ந்து, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசியதாவது: வாஜ்பாய் பிறந்த தினம், நல்-லாட்சி தினமாக நாடு முழுதும் கொண்டாப்படுகிறது. பிரதமர் மோடி, பாரத தேசத்தை, 2047ல் வலிமை, வல்லமை மிக்க பாரத-மாக உருவாக்க அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறார். இதற்கு அடித்தளமிட்டவர் வாஜ்பாய். தங்க நாற்கரக சாலை திட்டத்தை கொண்டு வந்து, துறைமுகங்களை, கிராமங்களுடன் இணைத்த பெருமை அவரையே சேரும். வாஜ்பாய் வழியில் நல்லாட்சி தந்து-கொண்டிருக்கிறார்
பிரதமர் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், ஒன்றிய பொதுச்செ-யலர் தமிழ்நேசன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் வெங்கடாசலம், ஒன்றிய தலைவர் மோகன்ராஜ் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்னதானம்பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்ட குகை மண்டல் சார்பில், கருங்கல்பட்டி மார்க்கெட் அருகே, வாஜ்பாய் பிறந்தநாள் கொண்-டாடப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். அதில் மாநில துணைத்தலைவர் துரைசாமி, வாஜ்பாய் படத்துக்கு மலர் துாவினார். தொடர்ந்து அவர் குறித்த தகவல்-களை பகிர்ந்து கொண்டார். பின், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் மேட்டூரில் நகர தலைவர் கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ரத்ததான முகாம்பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் முன், வாஜ்பாய் படத்துக்கு மாலை அணி-வித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின், பேளூரில் ரத்த தான முகாம் நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் குணசேகரன் பங்கேற்றனர்.

