/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கத்தி' போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்
/
'கத்தி' போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்
ADDED : ஜன 16, 2025 06:55 AM
சேலம்: சேலம், குகை புலிக்குத்தி தெருவில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று செவ்வாய்ப்பேட்டை கரிமார்கெட் பகுதியில் உள்ள நந்தவனத்தில், சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. வீரக்குமாரர்கள் கத்தி போடும் ஆயுதத்தை, அம்மன் முன் வைத்து சிறப்பு பூஜை செய்த பின், மஹா தீபாராதனை காட்டி, அம்மனை குதிரை வாகனத்தில் அமர்த்தி ஊர்வலம் புறப்பட்டது.
அப்போது ஏராளமான வீரக்குமாரர்கள், உடல்களில் கத்தி போட்டு அம்மனை அழைத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது சிவன், பெருமாள், உள்ளிட்ட தெய்வங்கள் வேடம் தரித்து ஆடியபடி சென்றனர். குகை, புலிக்குத்தி தெரு சென்றதும் அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. மாலை, 400க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள், விளக்கு பூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள், மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.