/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
ADDED : பிப் 23, 2024 02:03 AM
சேலம்;தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2ம் கட்டமாக நேற்று, சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது:அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம்; 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 13ல் போராட்டம் நடந்தது.
முதல்வர் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதனால் தேர்தல் பணி, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட வருவாய்த்துறை பணிகள் முழுமையாக பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் பொருளாளர் முருகபூபதி, இணை செயலர் அகிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூர், ஓமலுார், காடையாம்பாட்டி தாலுகா அலுவலகங்கள் முன் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.