/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மது பழக்கத்தை கைவிட கயிறு' குடிமகன்களின் நுாதன வழிபாடு
/
'மது பழக்கத்தை கைவிட கயிறு' குடிமகன்களின் நுாதன வழிபாடு
'மது பழக்கத்தை கைவிட கயிறு' குடிமகன்களின் நுாதன வழிபாடு
'மது பழக்கத்தை கைவிட கயிறு' குடிமகன்களின் நுாதன வழிபாடு
ADDED : அக் 06, 2024 03:54 AM
ஆத்துார்: ஆத்துார் சம்போடை வன மதுரகாளியம்மன் கோவிலுக்கு சமீப காலமாக மது பழக்கத்துக்கு அடிமையான பலர் வருகின்றனர். மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து, அம்மன் மடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழத்தை சாப்பிட்டு கையில் கயிறு கட்டி செல்கின்றனர். இதேபோல் நேற்றும் பலர் கயிறு கட்டிக் கொண்டனர். அவர்களுக்கு பூசாரி ராஜாமணி கயிறு கட்டினார். முன்னதாக அவர்கள், 'இனி மது குடிக்க மாட்டேன்' என, சுவாமி எதிரே கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்தனர்.
இதுகுறித்து பூசாரி ராஜாமணி கூறுகையில், ''இங்கு சத்தியம் செய்து செல்லும் 'குடி'மகன்கள், மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கையில் உள்ள கயிற்றை அவிழ்த்துவிட்டு மீண்டும் குடிக்கின்றனர். அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். கணவர், மகன்களை, அழைத்து வந்து பல பெண்கள் சத்தியம் செய்து செல்கின்றனர்,'' என்றார்.