/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 29, 2024 07:14 AM
ஆத்துார்: இடத்தை காலி செய்யும்படி, ஆத்துார் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, 30 குடும்பத்தினர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த, 30 பேர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முரு-கேசன் உள்ளிட்டோர், நேற்று ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர். அதில், 'கடந்த, 1998ல், தம்மம்பட்டி அருந்ததியர் சமு-தாயத்தை சேர்ந்த நாங்கள், அதே பகுதியை சேர்ந்த இருவரிடம், 1.80 ஏக்கர் நிலத்தை, 1.87 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அந்த
நிலத்தில், 30 குடும்பத்தினர் பத்திரம் எழுதினோம். 2002ல், ஆத்துார் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா பெற்றோம். கடுமையான வறட்சிக்கு பின், வெளியூருக்கு பிழைப்பை தேடி சென்றோம். இந்நிலையில், 20 பேரின்
பட்டாவை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளனர்.தங்களது இடத்தை சுத்தம் செய்தபோது, ஆதிதிராவிடர் நலத்-துறை தாசில்தார் உள்ளிட்டோர், நாங்கள் குடியிருக்க தகுதி இல்-லாதவர்கள் என்றும், இடத்தை காலி செய்யும்படி, நோட்டீஸ் வழங்கியுள்ளனர். பணம் செலுத்தி
வாங்கிய இடத்தில், பட்டா ரத்து செய்ததுடன், இடத்தை காலி செய்யும்படி கூறுவது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பி-டப்பட்டுள்ளது.