/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக வளர்ச்சி போராட்டம் 2 நாட்கள் பணிகள் பாதிக்கும்
/
ஊரக வளர்ச்சி போராட்டம் 2 நாட்கள் பணிகள் பாதிக்கும்
ஊரக வளர்ச்சி போராட்டம் 2 நாட்கள் பணிகள் பாதிக்கும்
ஊரக வளர்ச்சி போராட்டம் 2 நாட்கள் பணிகள் பாதிக்கும்
ADDED : ஆக 22, 2024 03:51 AM
சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று, நாளை தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றிய அலுவலகம், ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, வேலை உறுதி திட்டம், கனவு இல்ல திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு தனி ஊழியர் கட்டமைப்பு, கணினி உதவியாளர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தல், உள்ளாட்சி தேர்தல் பணிக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு, கருணை பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். மேலும் வீடு கட்டும் திட்டப்பணிகளுக்கு உரிய பணியிடங்களை வழங்கவும், ஊராட்சி செயலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதவி இயக்குனர் பணியிடங்களில் நேரடி அலுவலர்கள் நியமிப்பதை முறைப்படுதல் உள்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 22, 23ல், தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.