/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காப்புக்கட்டு விற்பனை அமோகம் காய்கறி, பழம், பூ வாங்க குவிந்த மக்கள்
/
காப்புக்கட்டு விற்பனை அமோகம் காய்கறி, பழம், பூ வாங்க குவிந்த மக்கள்
காப்புக்கட்டு விற்பனை அமோகம் காய்கறி, பழம், பூ வாங்க குவிந்த மக்கள்
காப்புக்கட்டு விற்பனை அமோகம் காய்கறி, பழம், பூ வாங்க குவிந்த மக்கள்
ADDED : ஜன 13, 2025 03:20 AM
சேலம்: தை பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் ஆவாரை, சிறுபீளை, வேப்-பிலை, மாவிலை, தும்பை, பிரண்டையை ஒருசேர சேர்த்து வீட்டின் முகப்பில் இருபுறமும் காப்புக்கட்டி மகாலட்சுமியை வர-வேற்பது ஐதீகம். இதனால் சேலத்தில் சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, மாநகராட்சி வணிக வளாகம் எதிரே, திரு
மணிமுத்தாறு கரையோரம், பால் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காப்புக்கட்டு விற்பனை களைகட்டியது.
அஸ்தம்பட்டி உழவர்சந்தையில் காப்புக்கட்டு, 20 ரூபாய்க்கு விற்-பனையானது. ஆனால் மாநகரின் பல்வேறு இடங்களில், 10 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்றனர். அதேபோல் ஆங்காங்கே மஞ்சள் கொத்தும் விற்பனைக்கு குவிக்கப்பட்டு, 50 முதல், 60 ரூபாய்; கரும்பு, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனையாகின.
உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ, 20 - 24 ரூபாய், உருளைக்-கிழங்கு, 45 - 60; சின்னவெங்காயம், 70 - 75; பெரிய வெங்-காயம், 50 - 60; பச்சை மிளகாய், வெண்டை தலா, 46; கத்திரி, 44 - 56; பீர்க்கன், 55; புடலங்காய், 38 - 40; பாகற்காய், 50 - 54; முருங்கைக்காய் ஒன்று, 10 - 20, தேங்காய், 60 - 70 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் முள்ளங்கி கிலோ, 25 ரூபாய், பீன்ஸ், 90 ரூபாய், அவரை, 100 - 120 ரூபாய், கேரட், 80 - 90; மாங்காய், 80 - 100; வாழைப்பழம், 45 - 100; சப்போட்டா, 40; மாதுளை, 150; சாத்துக்குடி, 80 - 100 ரூபாய்க்கு விற்பனையானது. மாவட்-டத்தின்,
13 உழவர்சந்தைகளிலும் காய்கறி விற்பனை அமோகமாக நடந்-தது.
மக்கள் அதிக அளவில் வந்து, ஆருத்ரா தரிசனம், தை பொங்க-லுக்கு தேவையான காய்கறி, பூஜைக்கு தேவையான வாழை இலை, பூக்கள், பழங்கள், தேங்காய் உள்ளிட்டவற்றை வாங்கிச்-சென்றனர்.
சேலம் வ.உ.சி., மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி-யது. கிலோ மல்லி, முல்லை தலா, 2,400 ரூபாய், ஜாதிமல்லி, மலைக்காட்டான் தலா, 1,000, காக்கட்டான், 1,200, ஏற்காடு மலைக்காட்டான், 800, சம்பங்கி, 180, சாதா சம்பங்கி, 250, அரளி, வெள்ளை அரளி தலா, 400, மஞ்சள், செவ்வரளி தலா, 500, ஐ.செவ்வரளி, 420, நந்தியாவட்டம், 220, சி.நந்தியா-வட்டம், 300, சாமந்தி கிலோ, 180 முதல், 280 ரூபாய்
விற்பனையானது.