/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்தை வாங்கிக்கொண்டு தந்தையை விரட்டிய மகன்
/
சொத்தை வாங்கிக்கொண்டு தந்தையை விரட்டிய மகன்
ADDED : ஆக 14, 2025 02:24 AM
இடைப்பாடி, இடைப்பாடி அருகே மொரசப்பட்டி, அம்மன்காட்டூரை சேர்ந்தவர் பெருமாள்கவுண்டர், 87. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக, 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில், இரு மகன்களுக்கும் தலா, 7 ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்துவிட்டு, இரு ஏக்கரை, பெருமாள்கவுண்டர் வைத்துக்கொண்டார்.
ஆனால் அந்த, 2 ஏக்கரில், ஒரு ஏக்கர் நிலத்தை, மூத்த மகன் ராஜன், 50, கடந்த மாதம், 16ல், அவரது பெயருக்கு எழுதி வாங்கி கொண்டார். தொடர்ந்து பெருமாள்கவுண்டரை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதுகுறித்து பெருமாள் கவுண்டர், பூலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, நேற்று, ராஜனை கைது செய்தனர்.