/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிக்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
/
ஏரிக்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
ஏரிக்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
ஏரிக்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
ADDED : அக் 08, 2024 03:40 AM
வீரபாண்டி: ஏரிக்கரையில், மூட்டை மூட்டையாக இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளதால், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்-கேடு ஏற்பட்டுள்ளது.
ஆட்டையாம்பட்டி-ராசிபுரம் சாலையில், எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது. 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிக்கு, திரு-மணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஆண்டு முழுவதும் நிரம்பி இருக்கும். இதன் கரையோரத்தில், சேலம் - நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழி-வுகளை கொட்டி மலை போல் குவித்து, ஏரிக்கரை முழுவதும் குப்பை கொட்டும் இடமாக மாற்றி வைத்திருந்தனர்.இரண்டு ஆண்டுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறையினர் ஏரிக்-கரை பகுதியில் சுத்தம் செய்து நுாற்றுக்கணக்கான மரக்கன்று-களை நட்டு பராமரித்து வருகின்றனர். இவை சிறிய மரங்களாக வளர்ந்துள்ள நிலையில், மீண்டும் இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து இரவில் கொட்டி செல்-கின்றனர். காலையில், ஏரிக்கரையில் நடைபயிற்சிக்கு செல்ப-வர்கள் கழிவுகள் அழுகி அடிக்கும் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்-தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வேறு சிலர் கோழி இறகு-களுக்கு தீ வைத்து விடுவதால், எழும் புகை மற்றும் துர்நாற்-றத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஏரிக்கரையில் கழிவுகள் கொட்டுபவர்களை கண்காணித்து, கடு-மையான அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.