/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளிகள் தாலுகா ஆபீசில் குடியேறும் போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் தாலுகா ஆபீசில் குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் தாலுகா ஆபீசில் குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் தாலுகா ஆபீசில் குடியேறும் போராட்டம்
ADDED : நவ 27, 2024 01:31 AM
ஓமலுார், நவ. 27--
இலவச வீட்டு மனை கேட்டு, தாலுகா அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஈடுபட முயன்றனர்.
ஓமலுார் தாலுகாவில் வீடற்ற மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டு மனை கேட்டு பல மாதங்களுக்கு முன் மனு அளித்திருந்தனர். அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வீட்டு மனை வழங்கக்கோரி, ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்திருந்தனர். ஆனால் வருவாய்த்துறையினர் காலம் கடத்துவதாக கூறி, மாற்றுத்திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர் நேற்று, ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போரா ட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அதற்காக, சமையல் பாத்திரங்கள், மிக்சி, பாய் தலையணை, குடம் ஆகியவற்றை சுமந்தபடி வந்தனர். அவர்களிடம் ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், அரை மணி நேரத்துக்கு மேலாக பேச்சு நடத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, 'அதிகாரிகள் மதிக்கவில்லை' என கூறி, தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள் வெளியே வந்து, அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கலெக்டர் பிருந்தாதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, ஒரு மாதத்தில் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என, தாசில்தார் ரவிக்குமார் தெரிவித்தார். இதனால் போராட்டத்தை கைவிட்டனர். அதேநேரம், தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ
அடையாள அட்டை வழங்கவும், கோரிக்கைகள் விடுத்தனர்.