ADDED : செப் 19, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நான் முதல்வன்' திட்டத்தில் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் ஆறகளூரை சேர்ந்த, அரசு பள்ளியில் படித்த மாணவி வாணிஸ்ரீ, 'ஆறகளூரில் தேர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைகள் பல மாதங்களாக துார் எடுக்காமல் உள்ளனர். கழிவுநீரால் நாற்றம், சுகாதார சீர்கேடு அதிகளவில் உள்ளன' என, கலெக்டர் பிருந்தாதேவியிடம் கூறினார்.
உடனே ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியை அழைத்த கலெக்டர், மாணவி கூறிய புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

