/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீடம் அகற்றிய இடத்தில் சிலை ஆபீசுக்கு துாக்கிவந்த தாசில்தார்
/
பீடம் அகற்றிய இடத்தில் சிலை ஆபீசுக்கு துாக்கிவந்த தாசில்தார்
பீடம் அகற்றிய இடத்தில் சிலை ஆபீசுக்கு துாக்கிவந்த தாசில்தார்
பீடம் அகற்றிய இடத்தில் சிலை ஆபீசுக்கு துாக்கிவந்த தாசில்தார்
ADDED : ஜூலை 22, 2024 07:02 AM
கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே மண்மலை, செங்கட்டில் புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு அப்பகுதியை சேர்ந்த சிலர், கோவில் கட்ட, கான்கிரீட் பீடம் அமைத்தனர். கடந்த, 11ல் கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், போலீசார், பீடத்தை, 'பொக்லைன்' மூலம் இடித்து அகற்றினர். நேற்று அதே இடத்தில் விநாயகர் சிலை வைத்து சிலர் வழிபட்-டனர். இதை அறிந்த தாசில்தார் பாலகிருஷ்ணன், தம்மம்பட்டி போலீசார், அங்கு சென்று, சிலையை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், ''புறம்போக்கு நிலம் வழியே, 440 கே.வி., பவர் கிரிட் மின் பாதை செல்வதால் கோவிலை அகற்ற, மின்வாரியம் மூலம் கடிதம் வழங்கினர். அரசு இடத்தில் அனுமதியின்றி கோவில் அமைத்தபோது அகற்-றினோம். அதே இடத்தில் சிலையும் வைத்ததால் கைப்பற்றி, தாலுகா அலுவலக பதிவறையில் வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.