/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'குடி'மகன்களின் கூடாரமான ஈமச்சடங்கு மண்டபம்
/
'குடி'மகன்களின் கூடாரமான ஈமச்சடங்கு மண்டபம்
ADDED : பிப் 19, 2025 07:05 AM
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி கரையில், எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி சார்பில் இறந்த முன்னோருக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு மண்டபம் கட்டப்பட்டது. ஆண், பெண் உடை மாற்றும் அறைகளுடன், 15 ஆண்டுக்கு முன் கட்டி பயன்பாட்டில் இருந்தது. ஆனால் முறையாக பராமரிப்பின்றி, 5 ஆண்டுக்கு மேலாக பூட்டியே கிடந்தது. இந்த ஏரியில் மீன்பிடி உரிமம் குத்தகை எடுப்பவர்கள், அந்த மண்டபத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில், 3 மாதங்களாக ஈமச்சடங்கு கட்டடம் திறந்தே கிடக்கிறது.
இதில், 'குடி'மகன்கள் பகலிலேயே குடித்து கும்மாளம் அடிக்கின்றனர். இரவில் சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளதால், மக்கள் யாரும் செல்வதில்லை. மேலும் ஏரிக்கரையிலேயே, பலர் முன்னோர்க்கு ஈமச்சடங்குகளை செய்து வருகின்றனர். அதனால் அந்த மண்டபத்தை சுத்தம் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

