/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கில் இருந்த பணம் திருட்டு; மூவர் கைது
/
பைக்கில் இருந்த பணம் திருட்டு; மூவர் கைது
ADDED : அக் 01, 2024 07:13 AM
ஓமலுார்: பைக்கில் இருந்த பணத்தை திருடிய வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர்.காடையாம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பாப்புச்-செட்டிப்பட்டியை சேர்ந்தவர் நீதிபதி, 36, கட்டட மேஸ்திரி. இவர் நேற்று மதியம் தனது சம்பள தொகையான, 11 ஆயிரம் ரூபாயை, ேஹாண்டா பைக் சீட் கவரில் வைத்துக்கொண்டு, பண்ணப்பட்டி டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு, 1,000 ரூபாய் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை பைக்கில் வைத்து-விட்டு, மது வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. இதுகுறித்து நீதிபதி அளித்த புகார்படி தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று இரவு பண்ணப்பட்-டியை சேர்ந்த மகேந்திரன், 24, கார்த்திக், 26, மாட்டுக்காரன்பு-துாரை சேர்ந்த பாலகிருஷ்ணன், 26, ஆகிய மூவரை கைது செய்-தனர்