/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊருக்குள் வராத டவுன் பஸ் கு.நாயக்கனுார் மக்கள் அவதி
/
ஊருக்குள் வராத டவுன் பஸ் கு.நாயக்கனுார் மக்கள் அவதி
ஊருக்குள் வராத டவுன் பஸ் கு.நாயக்கனுார் மக்கள் அவதி
ஊருக்குள் வராத டவுன் பஸ் கு.நாயக்கனுார் மக்கள் அவதி
ADDED : அக் 31, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி,  சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பனமரத்துப்பட்டி வழியே திப்பம்பட்டி ஊராட்சி குள்ளப்பநாயக்கனுார் ஊருக்குள், அரசு தொடக்கப்பள்ளி வரை, தனியார் பஸ் சென்று வந்தது. பின் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'தனியார் டவுன் பஸ், தினமும் காலை, இரவு ஊருக்குள் வந்து சென்றது. தற்போது வருவதில்லை. இதுகுறித்து பஸ் நிர்வாகியிடம் கேட்டால், வசூல் குறைவாக உள்ளதாக கூறுகிறார். இதனால் முதியோர், பயணியர் சிரமப்படுகின்றனர். மீண்டும் குள்ளப்பநாயக்கனுார் ஊருக்குள் பஸ் வந்து செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.