/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
/
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 20, 2024 07:49 AM
சேலம் : வேலை வாய்ப்பற் றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டு நிறைவடைந்த பின் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர் களுக்கும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞர் களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பொறியியல், மருத் துவம், கால்நடை மருத் துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்பு படித்த வர்கள், அரசின் பிற துறை சார்ந்த நலத்திட்டங்களில் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு, இந்த உதவித் தொகை வழங்கப்படாது. விண் ணப்பங்களை மாவட்ட வேலைவாய்பகபு அலுவல கத்தில் இல வசமாக பெற்றுக் கொள்ள லாம். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முக வரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்றவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை, வரும், 29க்குள் கோரிமேட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலு வலகத்தில் வழங்க வேண்டும்.