/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா
/
வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா
வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா
வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா
ADDED : அக் 01, 2024 01:39 AM
வழித்தடம் மீண்டும் ஆக்கிரமிப்பு
பாதிக்கப்பட்டவர்கள் திடீர் தர்ணா
சேலம், அக். 1-
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, 44. இவருடன் ஏழு பேர் மனு கொடுக்க, நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தவர்கள், திடீரென கலெக்டர் கார் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகே, தர்ணாவை கைவிட்டனர்.
அதன்பின் மனு கொடுத்ததும், பூபதி கூறியதாவது: சேலம் மாசிநாயக்கன்பட்டி ஏரிக்கு அருகே, ஏழு பேருக்கு சொந்தமான, 68 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்தின் ஒரு பகுதியை, அதே பகுதியை சேர்ந்த இருவர் ஆக்கிரமித்து முள்வேலி போட்டு அடைத்து விட்டனர். இப்புகாரின் பேரில், வாழப்பாடி தாசில்தார், அயோத்தியாப்பட்டணம் பி.டி.ஓ., தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து, வழிதடத்தை அடைத்து விட்டனர். இதற்கு போலீசார் உடந்தையாக இருப்பதால், இந்த பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.