/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைமடை பகுதி கால்வாய்களை துார்வாரும் பணி 90 சதவீதம் நிறைவு'
/
கடைமடை பகுதி கால்வாய்களை துார்வாரும் பணி 90 சதவீதம் நிறைவு'
கடைமடை பகுதி கால்வாய்களை துார்வாரும் பணி 90 சதவீதம் நிறைவு'
கடைமடை பகுதி கால்வாய்களை துார்வாரும் பணி 90 சதவீதம் நிறைவு'
ADDED : ஜூன் 05, 2025 01:15 AM
மேட்டூர், ஜூன் 5
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 113 அடியாக இருந்தது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு வரும், 12ல், முதல்வர் ஸ்டாலின் பாசன நீரை திறந்து வைக்க உள்ளார். இதனால் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன்குமார், நேற்று, மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மேட்டூர் அணை, 16 கண் மதகு துாண்கள், 5 கண் மதகு கால்வாய் பகுதி என, 31 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு, பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
பாசனத்துக்கு திறக்கும் நீர் இறுதிவரை சென்றடைய, கடைமடை பகுதி கால்வாய்களை துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதி பணியும் விரைவில் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அணையில், முதல்வர் நீர் திறக்கும் பகுதி, இடதுகரை, வலதுகரை, மேல்பூங்கா, 16 கண் மதகு துாண்களில், சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். மேட்டூர் அணை மேற்பார்வை பொறியாளர் சிவகுமார், கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பொறியாளர்கள்
உடனிருந்தனர்.