/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி பலி
/
இயந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி பலி
ADDED : நவ 01, 2024 01:58 AM
ஈரோடு, நவ. 1-
ஈரோட்டில், இயந்திரத்தில் தொழிலாளியின் தலை சிக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பீஹார் மாநிலம், நவதா மாவட்டம் கைதர் கிராமத்தை சேர்ந்தவர் ரித்தீஷ்குமார், 43. ஈரோடு வில்லரசம்பட்டி, கருவில்பாறை வலசு அம்மன் பிளாஸ்டிக் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த, 29 மதியம், 12:25 மணிக்கு கம்பெனியில் உள்ள, மோல்டிங் மிஷினில் ரித்தீஷ் குமார் தலை சிக்கியது.
இதில் அவருக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கம்பெனியின் மேலாளரான கோபி, வேலுமணி நகரை சேர்ந்த விமல் பிரசாத், 35, உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்காமல், வேலை செய்ய கூறியதால்தான் விபத்து ஏற்பட்டது. விமல் பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரித்தீஷ்குமார் சகோதரர் ஆனந்த் குமார் அளித்த புகார்படி, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.