/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காளை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம்
/
காளை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : அக் 16, 2024 06:55 AM
வீரபாண்டி: சேலம், நெய்க்காரப்பட்டி மலங்காட்டில் உள்ள ராஜகணபதி கோவில் கும்பாபி ேஷக விழா, நேற்று முன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள், வெள்ளை குதிரைகள் முன்புறம் செல்ல, கோபுர கலசங்கள், புனிதநீர் நிரப்பிய குடங்களை, பக்தர்கள் தலையில் சுமந்தபடி, மேள தாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியே சென்ற பின் ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது.
இன்று காலை, 6:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை பூஜை நிறைவடைந்து, அதில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் எடுத்து கோவிலை வலம் வந்து, 9:15 முதல், 10:30 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பா பிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.