/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காய்கறி வியாபாரி வீட்டில் ரூ.18 லட்சம் திருட்டு
/
காய்கறி வியாபாரி வீட்டில் ரூ.18 லட்சம் திருட்டு
ADDED : செப் 24, 2024 07:35 AM
சேலம்: சேலத்தில், காய்கறி வியாபாரி வீட்டில், 18 லட்சம் ரூபாய் திரு-டப்பட்டுள்ளது.சேலம், கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் நடேசன், 85. இவரது மனைவி வெள்ளச்சி, 75. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டா-வது மகள் கனகவல்லி தன் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் சின்னத்திருப்பதி, கன்னங்குறிச்சி உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி விற்பனை செய்து வருகின்-றனர்.
நேற்று முன்தினம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் நடேசன், மகள் கனகவல்லி காய்கறி வியாபாரம் செய்வதற்காக மாலை, 4:00 மணியளவில் சென்று விட்டு, மீண்டும் இரவு வீட்-டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உட்பட இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, 18 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய
வந்தது.
இது குறித்து கனகவல்லி அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, 35 பவுன் நகை மற்றும்
இரண்டு லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையர்கள் விட்டு விட்டு, 18 லட்சம் ரூபாயை மட்டும் எடுத்து சென்றது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை
நடத்தினர். வீடு ஒதுக்குப்புறமாக இருந்ததால் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. அந்த பகுதியை ஒட்டி வேறு எங்காவது, 'சிசி-டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து,
கன்-னங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.