/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெ.நா.பாளையத்தில் தடுப்பணை விரைவில் கட்ட வாய்ப்பு
/
பெ.நா.பாளையத்தில் தடுப்பணை விரைவில் கட்ட வாய்ப்பு
ADDED : நவ 14, 2024 07:42 AM
சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கணேசபுரம் ஊராட்சியில் வசிஷ்ட நதி குறுக்கே, 58 மீ., நீளத்துக்கு தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நபார்டு வங்கி, 5.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தடுப்பணையில், 0.33 மில்லியன் கனஅடி நீர் தேங்கி நிற்கும். அதேபோல் ஆண்டுக்கு மூன்று முறை நிரம்புவதன் மூலம், மொத்தம், 0.99 மி.கனஅடி நீர் சேமிக்கலாம். அதன்மூலம் நேரடியாக, 83.2 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி பாசன வசதி பெறும். மேலும் சின்னமசமுத்திரம், கணேசபுரம், ஏத்தாப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கிணறு, போர்வெல், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரிக்கும்.தமிழக நீர்வளத்துறை சார்பில் அதற்கான ஒப்பந்தம், கடந்த அக்டோபரில் விடப்பட்டதால், விரைவில் கட்டுமானப்பணி தொடங்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

