/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் புரட்டாசி தேரோட்டம் இல்லை
/
சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் புரட்டாசி தேரோட்டம் இல்லை
சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் புரட்டாசி தேரோட்டம் இல்லை
சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் புரட்டாசி தேரோட்டம் இல்லை
ADDED : அக் 10, 2025 03:40 AM
சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு கும்பாபி ேஷக பணிகள் நடப்பதால், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையின் நடத்தப்படும் தேரோட்டம் நாளை (அக்.,11) கிடையாது.
சேலம் சின்ன திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையில் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு இக்கோவிலில், 'பாலாலயம்' செய்யப்பட்டு கும்பாபி ேஷக திருப்பணிகள் நடந்து வருவதால், நடப்பாண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவர் மற்றும் பாலாலய பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
நாளை புரட்டாசி மாத நான்காவது மற்றும் கடைசி சனிக்கிழமையையொட்டி, நடத்தப்படும் தேரோட்டம் இல்லை. வழக்கமான பூஜைகள் உண்டு.