ADDED : ஜூன் 24, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர், கோம்புரான்காடு அருகே பாலமலை வனப்பகுதியில் வனத்து சின்னப்பர் தேவாலயம் உள்ளது.
அதன் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை பங்குத்தந்தை இருதய செல்வம், உதவி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. ஏராளமானோர் ஜெபம் செய்து வழிபட்டனர். மதியம் தேர்பவனி நடந்தது. ஏராளமானோர், மலை மீதுள்ள வனத்து சின்னப்பர் ஆலயத்துக்கு சென்று, மாலை போட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.