/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சன்னாசி வரதராஜ கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
சன்னாசி வரதராஜ கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
சன்னாசி வரதராஜ கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
சன்னாசி வரதராஜ கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 21, 2025 07:02 AM
ஆத்துார்: தளவாய்பட்டி கிராமத்தில் உள்ள, சன்னாசி வரதராஜ கோவிலில் தேர்த்திருவிழாவுக்கு, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ஆத்துார் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழ-மையான தேசிக சன்னியாசி வரதராஜ கோவில் உள்ளது. இங்கு சன்னியாசி வரதராஜ சுவாமி, விநாயகர், முருகன், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி,
ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. ஆண்டு தோறும் தை அமாவசை நாளில், தேர்த்திருவிழா நடந்து வருகிறது.வரும் 29ல், தை அமாவாசையையொட்டி தேர்த்திருவிழா நடக்கி-றது. நேற்று சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்து, கோவில் முகப்பில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்-தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு
செய்தனர்.