/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாக்கியதில் படுகாயம் அடைந்த திருடன் பலி முன்னாள் தலைவியின் கணவருக்கு வலை
/
தாக்கியதில் படுகாயம் அடைந்த திருடன் பலி முன்னாள் தலைவியின் கணவருக்கு வலை
தாக்கியதில் படுகாயம் அடைந்த திருடன் பலி முன்னாள் தலைவியின் கணவருக்கு வலை
தாக்கியதில் படுகாயம் அடைந்த திருடன் பலி முன்னாள் தலைவியின் கணவருக்கு வலை
ADDED : ஜூலை 16, 2025 02:01 AM
மேட்டூர், கொளத்துார், பாலமலை ஊராட்சி கெம்மம்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள், 60. ஊராட்சி முன்னாள் தலைவர். கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பூமாலை நகரை சேர்ந்த ஜோதிடர் ராஜா, 32. இவரது உறவினர் அண்ணாமலை, 39. இவர், அருகே உள்ள ராஜாவீதி, மாரியம்மன் கோவில் வீதியில் வசித்தார்.
கடந்த, 12ல், பாலமலையில் தைலம் விற்க, பைக்கில் ராஜா சென்றார். அவருடன் அண்ணாமலையும் சென்றார். கெம்மம்பட்டிக்கு சென்று ராஜம்மாளிடம் தைலம் வேண்டுமா என கேட்டனர். அவர் வேண்டாம் என கூறி விட்டார். தொடர்ந்து ராஜா, 'ஜோதிடம் பார்த்து தோஷம் கழிப்போம்' என கூறினார். அதற்கு ராஜம்மாள், 'எங்களுக்கும் நேரம் சரியில்லை தோஷம் கழித்து பரிகாரம் செய்ய வேண்டும்' என கூறினார். அதற்கு ராஜா, அண்ணாமலை ஆகியோர், 'தோஷம் கழிக்கிறோம். அதற்கு குளித்து விட்டு வர வேண்டும்' என கூறினர்.
அப்போது ராஜம்மாள் அணிந்திருந்த, அரை பவுன் கம்மலை கழற்றி பரிகாரம் செய்வதற்கு, ராஜாவிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றார். ராஜம்மாள் சென்றதும், ராஜா, அண்ணாமலை ஆகியோர், கம்மலுடன் பைக்கில் புறப்பட்டு, அடிவாரத்தில் உள்ள கண்ணாமூச்சி வழியே கொளத்துார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அதை அறிந்த ராஜம்மாளின் கணவர், பாலமலையை சேர்ந்த சிலர், பைக்கை வழிமறித்து ராஜா, அண்ணாமலையை தாக்கினர். காயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் அண்ணாமலை நேற்று உயிரிழந்தார். கொளத்துார் போலீசார், ராஜம்மாள் கணவர் மாதப்பன் உள்பட, பெயர் தெரியாத சிலரை தேடி
வருகின்றனர்.