/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குபேர கணபதி கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
/
குபேர கணபதி கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : செப் 06, 2024 07:43 AM
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே ராஜாபாளையம் வடக்கு வலம்புரி குபேர கணபதி கோவிலில் மகா கணபதி பூஜையுடன் கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து, பக்தர்கள் தீர்த்தக்குடங்களில் நிரப்பினர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மாலையில் யாகசாலை முதல் கால பூஜை தொடங்கி யாகங்கள் செய்யப்பட்டன.
இரவு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இன்று அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை, 6:00 மணிக்கு பூர்ணாஹூதி செய்து புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசத்துக்கு ஊற்றி கும்பாபி ேஷகம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூஜை செய்யப்படுகிறது.
இன்று கும்பாபிேஷகம்
இளம்பிள்ளை சக்தி சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 19ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, யாகசாலையில் கணபதி ஹோமம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு மேல், 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.