sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

/

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்: நாளை கும்பாபிேஷகம்


ADDED : ஜூலை 11, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே ஊஞ்சக்காட்டில் உள்ள விநாயகர், கோண பெருமாள், துளசிராம பெருமாள், ஓபுளிராய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமானுஜர், ராகவேந்திர சுவாமிகள் உள்ளிட்ட பரி-வார தெய்வங்களுடன் உள்ள கோவில் புனரமைக்கப்பட்டு கும்-பாபிேஷக விழா நேற்று காலை கணபதி யாகத்துடன் தொடங்கி-யது.

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் புனி-தநீர் கலசங்களை தலையில் சுமந்தபடி, கோவிலுக்கு வந்து அபி ேஷகம் செய்தனர்.இன்று காலை, 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும். இரவு, 7:00 மணிக்கு திருமுருக கிருபானந்த வாரி-யாரின் மாணவி தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்கள், கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு கோ பூஜை செய்து மகா பூர்ணாஹூ-தியுடன் யாகசாலை நிறைவடையும். காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து பெருமாள்களுக்கு புனிதநீரால் அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்படும். பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us