ADDED : மே 08, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே திருமுறை இசை வகுப்பு நேற்று தொடங்கியது.
திருமுறை பதிகங்கள், பாடல்கள், அபிராமி அந்தாதி உள்ளிட்டவை கற்பிக்கப்பட்டன.
இதுகுறித்து செயலர் சந்திரசேகர் கூறுகையில், ''புதன்தோறும் வகுப்பு நடக்க உள்ளது. வயது வரம்பு, கட்டணம் கிடையாது.
அகத்தியர் தேவார திரட்டு புத்தகம் கொண்டு வரவேண்டும். விபரம் பெற, 94422 67889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

