/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருநீலகண்ட நாயனார் 25ம் ஆண்டு குரு பூஜை
/
திருநீலகண்ட நாயனார் 25ம் ஆண்டு குரு பூஜை
ADDED : ஜன 24, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம் குலாலர் சமூகம் சார்பில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் சுவாமி, 25ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.
வழக்கமாக இந்த பூஜையில் நீலாயதாட்சாயினி சமேத திருநீலகண்டரின் உற்சவ திருமேனிக்கு சிறப்பு அபிேஷகம், சர்வ அலங்காரம் செய்து பரிவட்டம் கட்டி பூஜை செய்யப்படும். ஆனால் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், நாயன்மார்களின் சக்தி இறக்கி வைத்துள்ள கண்ணாடிக்கு, சிறப்பு பூஜை செய்து பரிவட்டம் கட்டப்பட்டது. இதில் குலாலர் சமுதாயத்தினர், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

