/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் 'கிங் மேக்கர்ஸ்' நிகழ்ச்சியில் திருப்புகழ் பேச்சு
/
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் 'கிங் மேக்கர்ஸ்' நிகழ்ச்சியில் திருப்புகழ் பேச்சு
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் 'கிங் மேக்கர்ஸ்' நிகழ்ச்சியில் திருப்புகழ் பேச்சு
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் 'கிங் மேக்கர்ஸ்' நிகழ்ச்சியில் திருப்புகழ் பேச்சு
ADDED : அக் 26, 2025 01:19 AM
சேலம், ''தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்,'' என, 'கிங் மேக்கர்ஸ்' ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்திய பயிற்சி வகுப்பில், ஐ.ஏ.எஸ்., திருப்புகழ் பேசினார்.
சேலத்தில் உள்ள, 'கிங் மேக்கர்ஸ்' ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், இலவச பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதில் இந்திய அரசின், முன்னாள் கூடுதல் செயலரான, சேலத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., திருப்புகழ் பேசியதாவது:
இந்திய குடிமைப்பணியில் சேர தயார்படுத்திக்கொண்டிருக்கும் நீங்கள், மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. சேலத்தில் இருக்கும் நான் எப்படி இந்தியாவின் தலைநகரான டில்லியில், தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவரோடு போட்டிப்போட முடியும் என்ற தாழ்வு மனப்பான்மை உங்களில் பலருக்கும் இருக்கலாம்.
நான் படிக்கும்போது இணைய சேவை கிடையாது. இதுபோன்ற பயிற்சி மையங்கள் கூட கிடையாது. இருந்தும் நான் உள்ளூர் நுாலகத்தில் படித்து குடிமைப்பணி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். இன்றைய காலகட்டத்தில் டில்லி மட்டுமல்ல. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் உலகில் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் கற்றுத்தருவதை யார் வேண்டுமானாலும், இருந்த இடத்தில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும்.
அனைவரும் சேலத்தில் படிக்கிறோம். அரசு பள்ளியில் படித்துள்ளோம். தமிழ் வழியில் படித்தோம் என எந்தவித தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என, தன்னம்பிக்கையை வளர்த்துக்
கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை, 'கிங் மேக்கர்ஸ்' ஐ.ஏ.எஸ்., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் உள்ளிட்ட அலுவலர்கள்
செய்திருந்தனர்.

