/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐயப்பன் சுவாமிக்கு திருவிளக்கு பூஜை
/
ஐயப்பன் சுவாமிக்கு திருவிளக்கு பூஜை
ADDED : டிச 07, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், 32ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, 108 சங்காபி ேஷக பூஜை நேற்று நடந்தது. அப்போது ஐயப்பன் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட அபி ேஷக பூஜை, 108 வலம்புரி சங்குகளில் பூஜை நடந்தது.
தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில், 250 சுமங்கலி பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அவர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், ஜாக்கெட், வளையல், பாத்திரம் வழங்கப்பட்டன. முன்னதாக மூலவர் ஐயப்பன் சுவாமி வெள்ளி
கவசத்திலும், உற்சவர், தங்க கவசத்திலும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம்
வழங்கப்பட்டது.