/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'விடுபட்டவர்கள் விண்ணப்பித்து மகளிர் உரிமைத்தொகை பெறலாம்'
/
'விடுபட்டவர்கள் விண்ணப்பித்து மகளிர் உரிமைத்தொகை பெறலாம்'
'விடுபட்டவர்கள் விண்ணப்பித்து மகளிர் உரிமைத்தொகை பெறலாம்'
'விடுபட்டவர்கள் விண்ணப்பித்து மகளிர் உரிமைத்தொகை பெறலாம்'
ADDED : ஜூலை 16, 2025 01:44 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், நேற்று, 6 இடங்களில் நடந்தது. அதில், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் நடந்த முகாமை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
இந்த முகாம், இன்று(நேற்று) தொடங்கி, நவ., 15 வரை நடக்கிறது. நகர்புறம், ஊரகப்பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள முகாம்கள் மூலம், மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில், நகர்புறத்தில், 168, ஊரகத்தில், 264 என, 432 முகாம்கள் நடத்தப்படும். இதில் பெறப்படும் மனுக்கள் மீது, 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
அதற்காக, தன்னார்வலர்கள் வீடுதோறும் சென்று, முகாம் விபரங்களை தெரிவித்து, படிவங்களை வழங்கி, மக்கள் கோரிக்கையை கேட்டறிந்து வருகின்றனர். மருத்துவ முகாம், இ - சேவை மையங்கள் உள்ளிட்ட வசதிகளும், முகாமில் செய்யப்பட்டுள்ளன.
இதில் கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை, வீட்டு வரி, சொத்து வரி, பெயர் மாற்றம், புது குடிநீர், மின் இணைப்பு, கட்டட மனைப்பிரிவு அனுமதி, பட்டா பெயர் மாற்றம், ஜாதிச்சான்றிதழ், இருப்பிடம், வருமான சான்றிதழ், தனி பட்டா, கூட்டு பட்டா, முதியோர், விதவை உதவித்தொகை, புது ரேஷன் கார்டு என, 43 வகை சேவைகள் பெறலாம். மாவட்டத்தில், 5.5 லட்சம் மகளிர், உரிமைத்தொகை பெறுகின்றனர். விடுபட்ட மகளிர் விண்ணப்பித்து உரிமைத்தொகை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ..,க்கள் அருள், சதாசிவம், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

