/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 10, 2024 03:20 AM
சேலம்:வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
தமிழக அரசு வீடுகள் தோறும் நுாலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், வீடுகள்தோறும் நுாலகம் அமைத்து பயன்படுத்தும் வாசகர்களை ஊக்குவிக்க, விருது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நுாலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தும் தனி நபர்களுக்கு, மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் விருது, 3,000 ரூபாய் மதிப்பில் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ண்பபிக்க விரும்புவோர், வீட்டில் உள்ள நுாலகத்தில் எத்தனை நுால்கள் உள்ளன,
எந்த வகை நுால்கள், அரிய நுால்கள் உள்ளிட்ட விபரங்களை, பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வரும், 30க்குள், newdlosalem2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், 'மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட நுாலக அலுவலகம், சேரராஜன் சாலை, அஸ்தம்பட்டி, சேலம் - 636 007' என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.