/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுபானம் விற்ற 3 பேருக்கு 'காப்பு'
/
மதுபானம் விற்ற 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 17, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி போலீசார், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, புதுப்பாளையத்தில் ரோந்து சென்றபோது, சட்ட விரோதமாக ஒருவர் மது விற்றது தெரிந்தது.அவரிடம் விசாரித்ததில், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டுடையார்பாளையத்தை சேர்ந்த ரவி, 58, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் குறிச்சியில் உள்ள வீட்டில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, கனகரத்தினம் மனைவி பரிமளா, 40, என்பவரை கைது செய்து, 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் நீர்முள்ளிக்குட்டையில், மது விற்ற சவுந்தர், 50, என்பவரை, காரிப்பட்டி போலீசார் கைது செய்து, 11 பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.