/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார் திருடிய வழக்கு 3 பேருக்கு 'காப்பு'
/
கார் திருடிய வழக்கு 3 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 04, 2025 01:33 AM
மகுடஞ்சாவடி :சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, நடுவனேரியை சேர்ந்தவர் பாஸ்கரன், 59. தறித்தொழிலாளி. இவர், சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ் 33, என்பவரிடம், பழைய இன்னோவா காரை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
தொடர்ந்து விக்னேஷ், சேலத்தை சேர்ந்த, அவரது நண்பர்களான சுப்ரமணி, 39, முரளிகண்ணன், 36, ஆகியோர், கடந்த ஜூலை, 31ல், பாஸ்கரன் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து பாஸ்கரன் புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்
பதிந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று சோளம்பள்ளத்தில், திருடப்பட்ட இன்னோவா காரில், முரளிகண்ணன், விக்னேஷ், சுப்ரமணி இருந்த நிலையில், தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின், காரை மீட்டனர்.