/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு மலைப்பாதையில் சாலையின் குறுக்கே விழுந்த மூன்று மரங்கள்
/
ஏற்காடு மலைப்பாதையில் சாலையின் குறுக்கே விழுந்த மூன்று மரங்கள்
ஏற்காடு மலைப்பாதையில் சாலையின் குறுக்கே விழுந்த மூன்று மரங்கள்
ஏற்காடு மலைப்பாதையில் சாலையின் குறுக்கே விழுந்த மூன்று மரங்கள்
ADDED : செப் 11, 2024 04:36 PM

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அப்போது மழை பெய்து வருகிறது. ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகில் அடுத்தடுத்து 3 மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வாகனங்கள் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரம் அறுக்கும் இயந்திரம் இல்லாததால் சாலையின் ஒரு பகுதியில் இருந்த மரத்தை அரிவாளால் வெட்டி அப்புறப்படுத்தி தற்காலிகமாக வாகனங்கள் சென்று வர வழி செய்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மரம் அறுக்கும் இயந்திரத்தை கொண்டு வந்து மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தினர்.